பி.எஃப் வட்டி விகிதம் 0.10% உயர்வு : 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.25 சதவீதமாக அதிகரிப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக அதிகரிக்‍கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு பி.எப்., ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்கள் வடிவில் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்கி வருகிறது. டெல்லியில் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 235 வது கூட்டத்தில் உறுப்பினர்களின் சந்தா தொகைக்‍கான வட்டி அதிகரிப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, 2022-23ல் 8.15 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 2023-24ஆம் ஆண்டில் 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் உயர்த்தப்பட்ட வட்டி, சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் மூலம் 6 கோடிக்‍கும் மேற்பட்ட ​பி.எப் சந்தாதாரர்கள் பயனடைவர். 

Night
Day